உளுந்து வடை

Posted by

தேவையான பொருட்கள்:

 • உளுந்து-200 கிராம்
 • மிளகு-1டீ ஸ்பூன்
 • பச்சை மிளகாய்-3
 •  வெங்காயம்-1
 • கறிவேப்பிலை
 • உப்பு
 • காயம் பொடி-1/4 டீ ஸ்பூன்
 • இஞ்சி-1சிறிய துண்டு பொடி பொடியாக நறுக்கியது
 • கொத்தமல்லி இலை-சிறிது
 • எண்ணெய் -பொறிக்க

செய்முறை:

 • முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
 • ஒரு அரை மணி பிரிட்ஜில் வைக்கவும்.
 • அதை அரை மணி நேரம் கழித்து கிரைண்டரில் தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.
 • நல்ல பொங்க பொங்க அரைக்கவும்.
 • அதில் வெங்காயம்,மிளகு,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,உப்பு ,காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 • எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உள்ளங்கையில் தண்ணீர் தொட்டு தட்டி போடவும்.
 • நன்கு சிவக்க வேக வைத்து எடுக்கவும்.

    

   Leave a Reply

   This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.