உளுந்து சாதம்

Posted by

உளுந்து சாதம் செய்வதற்கு வெள்ளை உளுந்தை விட கருப்பு உளுந்தே சிறந்தது.வளரும் பெண் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்

  • கருப்பு உளுந்து – 100 கிராம்
  • அரிசி                      – 200 கிராம்
  • பூண்டு                    –  2
  • சீரகம்                       – 1 ஸ்பூன்
  • உப்பு                          – தேவையான                                                     அளவு 
  • தண்ணீர்                –  1 லிட்டர் 

 செய்முறை:

*  குக்கரில்  1 லிட்டர் தண்ணீர் ஊற்றி

கொதிக்க விடவும்.

*  அதில் சீரகம்,பூண்டு போட்டு சேர்த்து

கொதிக்கவிடவும்.

*   பின் உளுந்து,அரிசி கழுவி கொதிக்கும்

தண்ணீரில் சேர்க்கவும்.

*    குக்கரை மூடி 3 சத்தம் வரும் வரை விடவும்.

*     சூடான உளுந்து சாதம் ரெடி.

*      உளுந்து சாதத்துடன் எள்ளு துவையல் ,

கத்திரிக்காய் பச்சடி, வெந்தய குழம்பு

பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.