இடி சாம்பார்

Posted by

தேவையான பொருட்கள்:

  • துவரம் பருப்பு-150 கிராம்
  • விருப்பப்பட்ட காய்கறிகள்-400 கிராம்
  • தக்காளி -1
  • வெங்காயம்-1
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • காயம் -சிறிது
  • மிளகாய் வத்தல்-6
  • மஞ்சள் தூள்-சிறிது
  • மல்லி விதை- 3 டேபிள் ஸ்பூன்
  • மிளகு-1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம்-1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு
  • வெந்தயம்-1/4 டேபிள்ஸ்பூன்
  • கடுகு,உளுந்து- சிறிது
  • அரிசி-1 டேபிள் ஸ்பூன்
  • புளி கரைசல்-தேவைக்கு

செய்முறை:

  • முதலில் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
  • அடுத்து பொடி செய்ய வேண்டும். அதற்கு மல்லி,அரிசி,மிளகு,சீரகம்,மிளகாய் வற்றல் வறுத்து பொடித்து கொள்ளவும்.
  • காய்கறிகளை உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
  • அடுத்து வெங்காயத்தை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளவும்
  • காய்கறி கலவையில்,பருப்பு,அரைத்த பொடி, புளி கரைசல், உப்பு,மஞ்சள் தூள்,வதக்கிய வெங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அடுத்து தாளிக்க சட்டியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுந்து,கறிவேப்பிலை,வெந்தயம்  போட்டு தாளித்து ஊற்றவும்.
  • மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.