ஆழியாறு அணை மீன் வறுவல்

Posted by

தேவையான பொருட்கள்: 
மீன் மசாலா கலவை 

தேங்காய் எண்ணெய்  1 மேஜைக்கரண்டி 

முட்டை  2

வரமிளகாய் தூள்  1  மேஜைக்கரண்டி 

மஞ்சள் தூள்  1 தேக்கரண்டி

மிளகு தூள் 2 1/2 தேக்கரண்டி 

மைதா மாவு  1/2 மேஜைக்கரண்டி 

அரிசி மாவு 1/2 மேஜைக்கரண்டி 

இஞ்சி  3 இன்ச் 

பூண்டு  9 பற்கள் 

உப்புத்தூள் தேவையான அளவு 

கட்லா /நெய் மீன் 500 கிராம் 

கறிவேப்பிலை  1 கொத்து 

எலுமிச்சம்பழ சாறு  1 மேஜைக்கரண்டி
மற்றவை:
வேர்கடலை எண்ணெய்  1/2 கப் 

கறிவேப்பிலை  10 கொத்து 

பச்சை மிளகாய்  8 ( கீற்றுகளாக வெட்டி கொள்ளவும் )

எலுமிச்சை துண்டுகள்  5
செய்முறை:

 

1. மிக்சியில் முட்டையை உடைத்து ஊற்றவும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,அரிசி மாவு, மைதாமாவு, மிளகு தூள்,  கறிவேப்பிலை, எலுமிச்சை பழச்சாறு, தேங்காய் எண்ணெய், இஞ்சி மற்றும் பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். ஒரு பொட்டு தண்ணீர்கூட உபயோக படுத்த கூடாது. 
2. இந்த மசாலா கலவையை சுத்தபடுத்தி கழுவி வைத்துள்ள மீன் துண்டுகள் மீது பூசவும். மசாலாவில் நன்றாக பிரட்டிய மீன் துண்டுகளை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ள வேண்டும். 
3. ஒரு வடச்சட்டியில் வேர்கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மீன் துண்டங்களை போட்டு  பொறித்து சிவந்து எடுக்கவும். மீன் துண்டங்களை எடுக்கும் சமயத்துல கீறி வைத்துள்ள பச்சை மிளகாயையும், கறிவேப்பிலையையும் வடச்சட்டியில் உள்ள எண்ணெய்ல போடவும். 
4. பிறகென்ன பொறித்த மீன் துண்டங்களை எலுமிச்சம்பழ துண்டுகளுடன் வதக்கிய பச்சை மிளகாய் கீற்றுகளுடன், பொறிந்த கறிவேப்பிலையுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.