ஆற்காடு நவாப் ஸ்டைல் மட்டன் பிரியாணி

Posted by

அன்சர் பாய்
இவர் ஒரு பிரபலமான பிரியாணி மாஸ்டர்.  இவர் தான் இந்த பிரியாணியின் மேக்கர்.
இந்த இஸ்லாமிய மட்டன் பிரியாணியின் சுவை மாறாமல் இருக்கும். 
இவர்கள் சுவையும் நிஜாமுதீன் (ஆந்திரா ) பிரியாணியின் சுவையோடு  ஒத்து போகும்.  இந்த  பகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமான தொகை உள்ளனர்.  
சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து ஆற்காடு பிரியாணி சாப்பிட வருகிறவர்கள் உள்ளனர்.  இங்குள்ள பிரியாணி மாஸ்டர் களுக்கு  ஒரு தனிப்பட்ட டிமாண்ட்  உள்ளது. 
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – ஒரு கிலோ

மட்டன் – 1.25 கிலோ

வெங்காயம் – அரை கிலோ

பழுத்த தக்காளி – 200  கிராம்

பழுத்த சிவந்த பச்சை மிளகாய் – 5

காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி

தயிர் – ஒரு கோப்பை

கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி 

இஞ்சி பூண்டு விழுது – 2  மேஜைக்கரண்டி 

புதினா – ஒரு கைப்பிடி 

பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு

அண்ணாச்சி மொக்கு – 2

காஜ்சுபத்திரி – 4 பூ

பிரியாணி இலை – இரண்டு

உப்பு தூள் – தேவையான அளவு

எண்ணெய் – 100 மில்லி

நெய் – 50 மில்லி

வெண்ணை – 200 கிராம்

எலுமிச்சை -அரை பழம்
மசாலா அரைக்க :
சின்ன  வெங்காயம் 10

மிளகு 5

பச்சை மிளகாய் 3

ஏலக்காய் 2
இந்த பொருட்களை மிக்ஸியில் இட்டு அரைக்கவும். 
செய்முறை

1. அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும். 
2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.
3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் + வெண்ணை 150 கிராம்  ஊற்றி அதில் பட்டை,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை , அண்ணாச்சி மொக்கு,  காஜ்சுபத்திரி  போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
4. வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி  பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 
5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.
6. அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.
7. மட்டன் வெந்து  கிரேவி பதம் வரும் வரை வேக விடவும். ( முக்கால் வேக்காடு தான் வேக விடவும் )
8. மட்டன்அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
9. தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு தண்ணீரில் கொஞ்சம் ஆரஞ்சு புட் கலர் ஒரு சிட்டிகை சேர்க்கவும். 
10. கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
11. பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும்.
11. சுவையான ஆற்காடு நவாப் மட்டன் பிரியாணி ரெடி. 
தம் போடும் முறை :
1. அடுப்பின் மீது ஒரு அகன்ற தோசை கல்லை வைத்து. பிரியாணி பாத்திரத்தின் அகன்ற வாயை ஒரு காடா துனியாலோ அல்லது காட்டன் வேட்டியை கொண்டு ஆவி வெளியே வராதவாறு கட்டி கொள்ளுதல் வேண்டும். 
2. அதன் மீது சுடுதண்ணி பாத்திரத்தை கட்டியுள்ள வேட்டியின் மீது ஒரு தட்டை வைத்து மூடி அதன் மேல் சுடுதண்ணி பாத்திரத்தை வைக்க வேண்டும். 
3. இல்லாவிடில் அடுப்பின் தீயை குறைத்து தோசைகல் இல்லாமல் மற்ற அனைத்து முறையையும் பின்பற்றவும். 
குறிப்பு
1. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி, (பிரட் ஹல்வா, தக்காளி ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, கேரட் ஹல்வா) ஏதேனும் ஒரு ஸ்வீட், எண்ணெய் கத்திரிக்காயுடன் சாப்பிடலாம்.
2. இதற்கான  பாத்திரம் வெங்கல பாத்திரமாக இருத்தல் வேண்டும் சுவை கூடும்.  கிண்டுவதற்கு இரும்பு துடுப்பியை மட்டும் கிண்டுவதற்கு உதவும். ( இல்லாவிடில் அனைத்து மசூதிகளிலும் வாடகைக்கு கிடைக்கும்  )
3. இஞ்சி-பூண்டு விழுதை தயாரிப்பதற்கு இஞ்சி  30 சதவிதம்  பூண்டு  70 சதவீதம்.  அதாவது 100  கிராம் இஞ்சி-பூண்டு விழுதை தயார் செய்வதற்கு  30 கிராம் இஞ்சி 70 கிராம் பூண்டு.
4. பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் மட்டுமே ஊறவைக்கவும்.  பாஸ்மதி அரிசிக்கு பதிலாக புல்லட் அரிசி என்று கிடைக்கும் அதிலும் செய்யலாம். 
5. விறகு அடுப்புல செய்தால் தான் அசல் சுவை கிடைக்கும். 
6. தம் போடும் கருவி என்பது பெரிய தோசைகல் போன்று இருக்கும். 
7. மட்டன் வெள்ளாட்டு கறியாக இருக்க வேண்டும் அதில்  தொடை கறியாகவும் இளம் ஆட்டு கறியாக இருத்தல் வேண்டும்.
8. உங்களுக்கு தகுந்தவாறு காரத்தை அட்ஜஸ் செய்து கொள்ளாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.