அவல் வெஜிடபிள் உப்புமா

Posted by

தேவையான பொருட்கள்:

  • சிவப்பு அவல்-1கப்
  • வெங்காயம்-1
  • கேரட்-1
  • பீன்ஸ்-10
  • பட்டாணி-1/2கப்
  • கறிவேப்பிலை-சிறிது
  • கொத்தமல்லி இலை-சிறிது
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய்-தேவையான அளவு
  • பச்சை மிளகாய்-2
  • சீரகம்-1/2 ஸ்பூன்

செய்முறை:

  • வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • காய்கறிகளை பொடியாக அரிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
  • அவலை தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம்,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் போட்டு தாளித்து கொள்ளவும்.
  • வெங்காயம் வதங்கியதும்,வேக வைத்த காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  • அடுத்து அவலை போட்டு கிளறி உப்பு சேர்க்கவும்.
  • அவலை போட்டு ரொம்ப நேரம் வதக்க கூடாது.
  • இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.