திணை பனியாரம்

Posted by

தேவையானப் பொருட்கள்:

  • திணை – 1 டம்ளர்
  • பொன்னி அரிசி – 1 டம்ளர்
  • வெந்தயம் – சிறிது
  • உளுந்து – 1/4 டம்ளர்
  • உப்பு – தேவைக்கு
  • வெங்காயம் ( பொடியாக நறுக்கியது) – 2
  • எண்ணெய் – 1 ஸ்பூன்
  • கடுகு,உளுந்து – 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை:

மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து சுத்தம் செய்து 7 மணி நேரம் ஊற விடவும்.

பின்பு கிரைண்டரில் நன்கு இட்லி மாவு பத்த்திற்கு ஆட்டி எடுத்து , வெங்காயம் தாளித்து , உப்பு போட்டு கலந்து மூடி வைக்கவும்.

ஒரு 7 மணி நேரம் புளிக்க விட்டு பனியாரச் சட்டியில் வார்த்து வேக வைத்து தக்காளிச் சட்னியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.