திணை கிச்சடி

Posted by

தேவையானப் பொருட்கள்:

திணை- 1 கப்

காரட் – 1

பச்சைப் பட்டாணி – சிறிது

உருளைக்கிழங்கு – 1

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

தக்காளி – 1

பூண்டு – 15 பல்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

பிரிஞ்சி இலை – 1

அன்னாசி பூ – 1

மஞ்சள்த்தூள் – சிறிது

உப்பு – தேவைக்கு

நெய் – 1 ஸ்பூன்

எண்ணெய் – 1 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை:

காய்களை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் சிறிது நெய்,சிறிது எண்ணெய் ஊற்றி காய விட்டு அதில் மசாலாப் பொருட்களைப் போட்டு வெடிக்க விடவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்

பூண்டு போட்டு வதங்கியதும், தக்காளி , காய்களைச் சேர்த்து திணை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் திணைக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

குக்கரை 3 விசில் விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.திணை கிச்சடி தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.