உணவு பழமொழிகள்

Posted by

1. மருந்தேயாயினும் விருந்தோடு உண்.

2. சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே!

3. வெட்டிவேரில் விசிறியும் விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.

4. வெந்தயம் போடாத கறியும் கறியல்ல; சந்தையில்லாத ஊரும் ஊரல்ல.

5. வில்வப் பழம் திண்பார் பித்தம் போக; பனம் பழம் திண்பார் பசி போக.

6. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

7. பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்.

8. உடம்பைக் கடம்பாலே அடி.

9. கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

10. சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை.

11. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.

12. கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி.

13. சுத்தம் சோறு போடும்.

14.லங்கணம் பரம ஔஷதம் (பட்டினி கிடப்பது மகத்தான மருந்து)

15. ஒருவேளை உண்பான் யோகி; இருவேளை உண்பான் போகி; மூவேளை உண்பான் ரோகி; நாலுவேளை உண்பான் போகியே போகி!

16. பாலுக்கு மிஞ்சின சுவையுமில்லை; பல்லக்குக்கு மிஞ்சின சொகுசுமில்லை.

17. நாழி அரிசி சோறு உண்டான், எமனுக்கு உயிர் கொடான்.

18. பொன்னாகும் காண் மேனி= பொன்னாங்காணிக் கீரை.

பொன்னாங் கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.

19. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

20. வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

21. பருப்பில்லாத கல்யாணம் உண்டா?

22. மங்கும் காலம் மாங்காய், பொங்கும் காலம் புளியங்காய்.

23. அரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தது போல!

24. ஐப்பசி மருதாணி அரக்காய்ப் பற்றும்.

25. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!

26. விருந்தும் மருந்தும் மூன்றே நாள்.

27. மக்களைக் காக்கும் மணத்தக்காளி.

28. தேனும் தினை மாவும் தேவர்க்கு அமிர்தம்.

29. வேலம் பட்டை மேகத்தை நீக்கும்; ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.

30. அன்னம் அடங்கினால் ஐந்தும் ஒடுங்கும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.