முடி உதிர்தல், பொடுகு நீங்க எண்ணெய்

Posted by

தேவையான பொருட்கள்:

 • தேங்காய் எண்ணெய்-1 லிட்டர்
 • கற்றாழை – 2 இதழ்கள்
 • கறிவேப்பிலை – 1 கைப்பிடி
 • வேப்பிலை – 1 கைப்பிடி
 • துளசி இலை – 1 கைப்பிடி
 • வெந்தயம் – 50 கிராம்
 • செய்முறை:
  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.
   பின்பு அதில் வெந்தயம், கருவேப்பிலை, வேப்பிலை, துளசி இலை, கற்றாழை முள் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
   நன்கு கொதித்ததும் அந்த எண்ணெயின் நிறம் இளம் பச்சை நிறத்தில் காணப்படும்.
   அடுப்பை அணைத்து விட்டு நன்கு ஆற விடவும்.
   இறுதியில் வடி கட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தவும்.

  பயன் படுத்தும் முறை:

  நன்கு முடியை சிக்கல் எடுத்து முடி வேர் கால்களில் தடவி விடவும். இரவு நேரம் முழுவதும் ஊற விடவும்.

  மறு நாள் காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் போதுமானது.

  இவ்வாறு தொடர்ந்து ஒரு 6 மாதங்கள் செய்து வர முடியில் நல்ல வித்யாசம் காணலாம்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.