பழமொழிகள்

Posted by

1. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்:
உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

2. எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.

பொருள்:
அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.

3. வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.

பொருள்:
 என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.

4. எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.

பொருள் 
திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.

5. சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?

பொருள்:
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது, ’கற்றலிற் கேட்டலே நன்றுஎன்பதற்கேற்ப அந்த ஊரில் பிறந்த குழந்தைகூட எளிதில் திருவெண்பாவை எளிதில் கற்றுக்கொள்ளும் என்பது செய்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.