கருமையான கூந்தலுக்கு

Posted by

தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள்.

இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கருமையாக மாறும்.

பச்சை வெங்காயத்தை அரைத்து ஸ்கால்ப்பில் தடவவும். அரை மணி நேரம் கழித்து அலாசவும்.

இவ்வாறு செய்தால், நாளடைவில் நரைமுடி மறைந்து, போஷாக்குடன் ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும்

கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலத்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டால் முடி கருமையாகும்.

ஒரு பிடி கரிசலாங்கண்ணி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர வேண்டும். படிப்படியாக இளநரை மாறி கூந்தல் கருமையாக மாறும்.

அவகேடோவின் சதை பகுதியை எடுத்து, பேஸ்ட் போலச் செய்து, தலையில் மாஸ்க் போல போட்டுக் கொள்ளுங்கள். 2 மணி நேரம் கழித்து தலை முடியை அலசலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் இள நரை சீக்கிரம் மறைந்துவிடும்.

ஹென்னாவுடன், பால் அல்லது, முட்டையின் வெள்ளைக் கரு கலந்து , தலையில் மாஸ்க் போல போட்டு குறைந்தது நான்கு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

அதன் பின்னர் தலைக்கு குளிக்க  வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடன் வளரும். இளநரை மறைந்து விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.