கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்??

Posted by

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்??
======================

கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.

பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,

தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.

பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில்,

தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்காத முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.

பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும்,

பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.

கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

வாட்ஸபில் யாரோ ஒரு நண்பரின் கருத்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.