உளவியல் சொல்லும் உண்மைகள்..!

Posted by
உளவியல் சொல்லும் உண்மைகள்..!
================================
1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில்
வாடுபவர்கள்…
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில்
இருப்பவர்கள்…
3. வேகமாக அதே நேரம் குறைவாக
பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை
வைத்திருப்பவர்கள்…
4. அழுகையை அடக்குபவர்கள் மனதால்
பலவீனமானவர்கள்…
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன
அழுத்தத்தில் இருப்பவர்கள்…
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும்
அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால்
மென்மையானவர்கள்…
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும்
கோபப்படுபவர்கள் அன்புக்காக
ஏங்குபவர்கள்…!

பேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…!
=====================================
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக்
கொள்ளாதீர்கள். அது உங்களை
பலவீனமானவராக காட்டும்.
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து
பேசவும். அது உங்களை நேர்மையானவராகக்
காட்டும்.
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு
குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க
வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து
பேசவும்.
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும்.
கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை
சோம்பேரி என நினைக்கக்கூடும்.
6. பேசும்போது முடியை கோதிக்
கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை
சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது
உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
7.நகத்தையோ, பென்சில் / பேனா
முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது
உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள்
சொல்வதை கேட்க விரும்பாதவரையும்
கேட்கவைக்கும்.
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில்
அமர்ந்து பரிவோடு பேசவும்.
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள்
கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள்
நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

தாழ்வு மனப்பான்மையை போக்க சில
உளவியல் வழிகள்…!
==============================
=====================
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள்
நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும்
சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.
யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான்
அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை
என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை
நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத்
சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய்
மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது
தெரியவில்லை என்று யாரேனும்
சொன்னாலும், அதை விரைவில் கற்றுக்
கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய்
முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று
நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும்
வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை
என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில்
நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு
போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம்
இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக
தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க
முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக
சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப்
பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு
தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள்
கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள்
அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும்
வரப்போவதில்லை என்பதை ஏற்றுக்
கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து
தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில்
நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,
நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10
உளவியல் பண்புகள்.
==============================
=====================
1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள்
ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும்
பதினைந்து நிமிடங்கள் தங்கள்
பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை
சுத்தம் செய்கிறார்கள்.
2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன்
கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில்
செல்லும்போது அதற்கெனவே
வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக
எடுத்துச் செல்வர்.
3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப்
பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார்.
அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-
த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு
சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய்
மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு
செய்யப்படுகிறார்.
4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று
எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு
நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு
ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான்
உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார
நாடாகும்.
5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து
தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான
மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக
வேண்டும் என்பதைச் சொல்லிக்
கொடுக்கப்படுகிறது.
6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய
பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள்
ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள்
வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே
வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக்
கொள்வர்.
7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம்
ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை
தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம்
செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க
நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர
தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்
கல்ல என்கிறார்கள்.
8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில்
எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல்
தமக்குத் தேவையானதை அளவில் மட்டும்
சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே
அங்கு இல்லை.
9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில்
தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம்
அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.
10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில்
சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல்
துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும்
உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும்
என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம்
ஒதுக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.